தளபதி விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அதேபோல் இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரம் தான் மிகவும் முக்கியமானதாக அமைந்தது.
ஆனால் மாஸ்டர் திரைப்படத்தில் சிறிய காட்சிகளில் நடித்த நடிகர்கள் பலரும் என்னுடைய கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம் என யூடியூப் சேனலுக்கு வளைத்து வளைத்து பேட்டிகளை கொடுத்தார்கள். அது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது அதிலும் சாந்தனு பாக்கியராஜ் மிகவும் பாவம் என்றே கூற வேண்டும் அந்த அளவு வச்சு செய்து வருகிறார்கள் இணையதள வாசிகள்.
மீம்ஸ் போட்டு அவரை நொங்கு எடுத்து வருகிறார்கள். மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் மெயின் ஹீரோவாக நடித்திருப்பது போலவும் இரண்டாவது ஹீரோவாக சாந்தனு நடித்தது போலவும் பில்டப் செய்து யூடியூப் சேனலுக்கு வளைத்தளத்திற்கு பேட்டி கொடுத்தார்.
சாந்தனு பாக்கியராஜ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அதேபோல் இதுவரை தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ளாமல் இருக்கிறார் இவர் விஜய்யின் தீவிர ரசிகர் அதனால் இவருக்கு மாஸ்டர் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இடம் கிடைத்தது.
அதுதான் தற்பொழுது இவருக்கு ஆப்பாக அமைந்துவிட்டது சாந்தனு பாக்கியராஜ் மாஸ்டர் திரைப்படத்தில் வந்த காட்சி நேரத்தை விட யூடியூப் சேனலுக்கு அதிகமாக பேட்டி கொடுத்துள்ளார் இதனால் தற்பொழுது ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள். அதிலும் தேசிய விருது வாங்கி விட்டதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
அந்த மீம்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மிகவும் வேதனையுடன் மனம் நொந்து பேசியுள்ளார் அது மட்டுமில்லாமல் அந்த பதிவில் கண்டிப்பாக நானும் தேசிய விருது வாங்குவேன் என கூறி உள்ளார். இந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.