பிரியமானவளே திரைப்படத்தின் படப்பிடிப்பில் தவித்த தளபதி விஜய்.! லண்டனில் கர்ப்பமாக இருந்த அவரது மனைவி சங்கீதா.! பல வருடங்கள் கழித்து வெளியான உண்மை.!

vijay
vijay

தமிழ் திரை உலகில் நிறைய ரசிகர் வட்டத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகர்களில் முக்கியமான நடிகர்தான் இளைய தளபதி விஜய் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி சுமார் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜய் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை முடித்த கையோடு விஜய் தனது அடுத்த திரைப்படத்தை எந்த இயக்குனருடன் கைகோர்ப்பார் என்பது பற்றி இன்னும் தெரியவில்லை இந்நிலையில் விஜய்யின் வாழ்க்கையில் நடந்த ஒரு சில சம்பவங்கள் பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஆம் என்ன சம்பவம் என்று கேட்டால் வேறு ஒன்றுமில்லை விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பிறந்த நிகழ்வு பற்றி தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது தளபதி விஜய் நடிகை சிம்ரன் உடன் இணைந்து பிரியமானவளே என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவரது மனைவி சங்கீதா கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் லண்டனுக்கு சென்று உள்ளாராம்.

அந்த நேரத்தில் பிரியமானவளே திரைப்படத்தில் நடித்து கொடுக்காமல் தளபதி விஜய் அங்கிருந்து அனுப்ப முடியவில்லை அதனால் தளபதி விஜய் சிம்ரனுடன் இணைந்து பிரியமானவளே என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் சிம்ரனுக்கு குழந்தை பிறக்கப்போவது தெரிந்து குடும்பமே சந்தோஷமாக ஆடி பாடி கொண்டாடுவார்கள். அப்படி இருக்கும் நிலைமையில் தான் தளபதி விஜய்க்கு குழந்தை பிறந்ததை ஈமெயிலில் வந்த போட்டோக்களில் மூலம் பார்த்தாராம்.

sangetha
sangetha

மேலும் தளபதி விஜய் சூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு குழந்தை பிறந்து விட்டது என்ற செய்தி கேட்டவுடன் சூட்டிங் ஸ்பாட் என்று கூட பார்க்காமல் மிகவும் உற்சாகமாகவும் ஆட்டம் போட்டு கொண்டாடியுள்ளார் என இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.