DD returns : நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த ஜூலை 28ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வரும் திரைப்படம் டிடி ரிட்டன்ஸ். தமிழ் சினிமாவில் இன்று காமெடியன்னாக பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து சினிமா உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் சந்தானம்.
இப்படி காமெடியனாக ஜொலித்து வந்த சந்தானம் தற்போது ஹீரோவாகவும் மாஸ் காட்டி வருகிறார். இவர் கடைசியாக குளு குளு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் அவருக்கு சுமாரான வரவேற்பையே பெற்றுக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து தற்போது சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ஒரு காமெடி கலந்த திகில் திரைப்படமாக உள்ளது.
இந்தப் படத்தை எஸ்கே ஆனந்த் இயக்க ஆர் கே என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார் மேலும் இவர்களுடன் இணைந்து ரெடின் கிங்ஸிலி, லொள்ளு சபா மாறன், மொட்டை ராஜேந்திரன், விஜயன் போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
இந்த படம் ஒரு ஜாலியான பேய் கதையை காமெடியாக எடுத்துள்ளதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் திரையரங்கிற்கு வந்து கண்டுகளித்து வருகின்றனர். இந்த படம் சந்தானத்திற்கு ஒரு வெற்றி படமாக பார்க்கப்படுகின்றன படம் வெளியாகி ஒவ்வொரு நாளும் நல்ல விமர்சனங்களும், வசூலும் பெற்று வருகின்றன.
இந்நிலையில் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் இரண்டு நாள் முடிவில் எவ்வளவு வசூலித்து இருக்கிறது என்ற விவரம் வெளியாகி இருக்கிறது அதன்படி இரண்டு நாள் முடிவில் 6 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தானம் டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மூலம் நல்ல கம்பேக் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றனர்.