திரில்லராக உருவாகி இருக்கும் சந்தானத்தின் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பட டீசர்.! தொடர் தோல்வியில் இருந்து மீள்வாரா.?

காமெடி நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் சந்தானம். இவ்வாறு சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறாமல் இருந்து வரும் நிலையில் தற்போது தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகத்தில் நடித்துள்ளார்.

அதாவது ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு தில்லுக்கு துட்டு படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை அடுத்து இந்த படத்தில் இரண்டாவது பாகம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் சூப்பர் ஹிட் பெற்றது.

இவ்வாறு இந்த திரைப்படத்திற்குப் பிறகு சந்தானம் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் படம் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் மேலும் வெற்றி பாதைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தில் நடித்துள்ளார் சந்தானம்.

அந்த வகையில் இந்த படத்திற்கு டிடி ரிட்டர்ன்ஸ் என்று பெயரிட்டு இருக்கும் நிலையில் புதுமுக இயக்குனர் எஸ் பிரேம்குமார் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிகை சுரபி நடித்திருக்கும் நிலையில் சமீப காலங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.