DD returns :காமெடி நடிகர்கள் பலரும் ஹீரோ அவதாரம் எடுத்து வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் வடிவேலு, கவுண்டமணி, யோகி பாபுவை தொடர்ந்து சந்தானமும் ஹீரோவாக நடித்த அசத்துகிறார் முதலில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இவர் நடித்த ஏ1, டக்கால்டி, தில்லுக்கு துட்டு போன்ற படங்கள் அனைத்துமே நன்றாக ஓடின இருந்தாலும் சந்தானம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை அல்லவில்லை இதை உணர்ந்து கொண்ட சந்தானம் இனி தன்னுடைய ட்ராக்கில் அதாவது காமெடி கலந்த படங்களில் நன்றாக நடித்தால் மட்டுமே வெற்றி பெறும்..
என்பதை உணர்ந்து கொண்டு எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார். படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்த சுரபி , ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், மாறன் விஜயன், masoom shankar, deepa shankar, boxer dheena மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர்.
படம் ஜூலை 28ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் ரசிகர்களின் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் கைத்தட்டல் வாங்கியது அதனால் அதிக நாட்கள் ஓடுவதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது
இந்த படம் இதுவரை உலக அளவில் 33 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. சந்தானம் கேரியரில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் பார்க்காத வசூலை டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் பெற்றிருக்கிறது அதனால் சந்தானத்திற்கு இந்த படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது.