DD returns : காமெடி நடிகர்கள் பலரும் ஹீரோ அவதாரம் எடுத்து வெற்றி காண்கின்றனர் அந்த வகையில் கவுண்டமணி, வடிவேலு, யோகிபாபுவை தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சில படங்கள் வெற்றியை பெற தவறின.
இதை உணர்ந்து கொண்ட சந்தானம் இனி காமெடி கலந்த படங்கள் தான் தனக்கு வெற்றிவாகை சூடம் என்பதை உணர்ந்து கொண்டு எஸ் பிரேம் ஆனந்த் சொன்ன காமெடி கலந்த கதையில் நடித்தார். டிடி ரிட்டன்ஸ் என்ற பெயரில் படமாக உருவாகியது படத்தில் சந்தானத்துடன் கைகோர்த்து சுரபி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி..
விஜயன், மாறன் மற்றும் பலர் நடித்திருந்தனர் படம் ஜூலை 28ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த பேய் படமாக இருந்ததால் குடும்பன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தற்போது வெற்றி நடை கண்டு வருகிறது.
ஆரம்பத்திலிருந்து இந்த படத்தின் வசூல் ஜோராக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் படம் வெளியாகி 7 நாட்கள் ஆன நிலையில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவலும் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் 7 நாட்கள் முடிவில் உலக அளவில் 20 கோடி மேல் வசூல் செய்துள்ளதாம்.
தமிழகத்தில் மட்டுமே சுமார் 16 கோடிக்கு மேல் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற நாட்களிலும் டிடி ரிட்டன்ஸ் படத்தின் வசூல் குறையாது அதிகரிக்கும் என கூறப்படுகிறது இதனால் சந்தானம் மற்றும் படக்குழு செம்ம குஷியில் உள்ளது.