DD returns : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சந்தானம். இவர் சமீபத்தில் நடித்த சில படங்கள் பெருமளவு வெற்றியை ருசிக்கவில்லை இதனால் சந்தனத்தை பலரும் விமர்சித்தனர் அவர் காமெடியனாகவே இருந்திருக்கலாம் ஹீரோவாக இருக்க லாக்கி இல்லை என சொல்லி வந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்க சந்தானமும் இனி தனக்கு எது வொர்க் அவுட் ஆகுமோ அதுபோன்ற கதைகளில் நடிக்க வேண்டும் என முடிவு பண்ணினார். இயக்குனர் எஸ் பிரேம் ஆனந்த் சொன்ன கதை சந்தனத்திற்கு ரொம்ப பிடித்து போக உடனே டிடி ரிட்டன்ஸ் படமாக உருவானது.
சந்தானத்துடன் கைகோர்த்து சுரபி, மொட்டை ராஜேந்திரன், விஜயன், தங்கதுரை, ரெட்டின் கிங்ஸ்லி, மாறன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். படம் ஜூலை 28ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. டிடி ரிட்டன்ஸ் படம் முழுக்க முழுக்க பேய் மற்றும் காமெடி கலந்த படமாக இருந்தால் பலருக்கும் பிடித்தது.
ஆரம்பத்திலேயே நல்ல விமர்சனத்தை பெற்றதால் அடுத்தடுத்த நாட்களில் படத்தை பார்க்க கூட்டம் திரையரங்குகளில் வந்தனர். இதனால் டிடி ரிட்டன்ஸ் படத்தின் வசூலும் அதிகரித்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிய நிலையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி 5 நாட்கள் முடிவில் 16 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாம். வருகின்ற நாட்களிலும் டிடி ரிட்டன்ஸ் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது இதனால் சந்தானம் மற்றும் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது. டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றியால் சந்தானம் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாகவும் ஒரு தகவல் உலாவி கொண்டிருக்கிறது.