போட்ட காசை எடுத்ததா சந்தானத்தின் “டிடி ரிட்டன்ஸ்”.? 4 நாட்கள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

DD returns
DD returns

DD returns : தமிழ் சினிமா உலகில் முன்னணி  காமெடி நடிகராக வந்த சந்தானம். திடீரென ஹீரோ அவதாரம் எடுத்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் இவர் முதலில் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் வெற்றி பெற்றது. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் பெரிய அளவு வெற்றியை பார்க்கவில்லை..

இதனால் பலரும் சந்தானம் தப்பான பாதையை தேர்ந்து எடுத்து விட்டதாக விமர்சித்தனர் இவர்களுக்கு பதிலடி கொடுக்க சந்தானம் டிடி ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார். படம் ஜூலை 28ஆம் தேதி வெளியானது. டிடி ரிட்டன்ஸ் படத்தில் சந்தனத்துடன்..

கைகோர்த்து  சுரபி.. மொட்ட ராஜேந்திரன், விஜயன், ரெட்டின் கிங்ஸ்லி, மாறன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் கொடுக்கப்படும் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து மக்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்கி வருகின்றனர். படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ஒரு பேய் படமாக இருந்ததால்..

குடும்ப அட்டியன்ஸ் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று உள்ளது அதன் காரணமாக கூட்டம் கூட்டமாக படத்தை பார்த்து வருகின்றனர். இதன் காரணமாக படத்தின் வசூலும் அடித்து நொறுக்கி வருகிறது முதல் நாளில் நான்கு கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலை இயல் அடுத்தடுத்த நாட்களில் நல்ல வசூலை அள்ளிக் கொண்டுதான் இருக்கிறது.

4 நாட்கள் முடிவில் சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் ஒட்டுமொத்தமாக சுமார் 15 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. டிடி ரிட்டன்ஸ் சந்தானத்திற்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படம் என பலரும் நடிப்பு கூறி வருகின்றனர்.