DD returns : காமெடி நடிகர்கள் பலரும் ஹீரோ அவதாரம் எடுத்து வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார். முதல் படமே வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து சந்தானத்திற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது.
சந்தானமும் காமெடி கலந்த படங்களில் நடித்தார் இதனால் அவருடைய படங்கள் சுமாராக ஓடின. இருப்பினும் கடைசியாக நடித்த குளு குளு, ஏஜென்ட் கண்ணாயிரம் போன்ற படங்கள் மொக்கை வாங்கியது இதிலிருந்து மீண்டு வர சந்தானம் எஸ் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
படத்தின் டிரைலர் வெளிவந்து எதிர்பார்ப்பு அதிகரிக்க வைத்த நிலையில் டிடி ரிட்டன்ஸ் 28ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படத்தில் சந்தானத்துடன் இணைந்து சுரபி, ராஜேந்திரன், பிரதீப் ராம் சிங் ராவத், மாறன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
படம் ஆரம்பத்திலிருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் மக்கள் கூட்டம் கூட்டமாக படத்தை பார்த்து வருகின்றனர் அதன் காரணமாக டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வசூலும் அள்ளி வருகிறது. 2 நாட்கள் முடிவில் 6 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்த நிலையில் 3 நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி டிடி ரிட்டன்ஸ் உலகம் முழுவதும் 11 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 9 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகின்ற நாட்களிலும் டிடி ரிட்டன்ஸ் படத்தின் வசூல் அதிகரிக்கும் என அடித்துக் கூறப்படுகிறது.