சினிமாவில் உள்ள அனைத்து பிரபலங்களும் யூடியூப் சேனல் வைத்திருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் விஜே அர்ச்சனாவும் தன்னுடைய யூடியூப் சேனலில் தொடர்ந்து ஏராளமான வீடியோக்கள் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் நவராத்திரிக்கு புது நிகழ்ச்சி ஒன்றை துவங்கி இருந்தார் அதில் பிரபல தொகுப்பாளர் திவ்யதர்ஷினியும் கலந்து கொண்டு தன்னுடைய வாழ்வில் நடந்த ஏராளமான முக்கிய தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது தொகுப்பாளர்களில் முக்கியமான ஒரு இடத்தில் இருப்பவர் தான் அர்ச்சனா இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகள் கலந்துக் கொண்டு பிறகு விஜய் டிவியில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய வந்தார் மேலும் தற்பொழுது மீண்டும் ஜீ தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இவர் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய யூடியூப் தளத்தில் வீட்டின் பாத்ரூம் டூரை வெளியிட்ட நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில் நவராத்திரியை முன்னிட்டு வித்யாசமான நிகழ்ச்சி ஒன்றை துவங்கியிருந்தார் அதில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்க்கை குறித்து பல தகவல்களை பகிர்ந்து இருந்தார்கள் அதில் முக்கியமான நபராக திவ்யதர்ஷினி கலந்திருந்தார். அதில் தனது சொந்த வாழ்க்கை முதல் தொலைக்காட்சியில் பணியாற்றுவது வரை அனைத்தையும் கூறியிருந்தார் அதில் தன்னுடைய விவாகரத்து குறித்து முதல்முறையாக பேசியிருந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் கூறியதாவது சின்ன வயதில் என் தந்தையை இழந்தேன் அப்போது வருத்தமாக இருந்தது ஆனால் அவரின் பல கடமைகளை நான் தற்பொழுது செய்து விட்டேன் என் குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இவர் தந்தை பற்றி பேசியதும் அர்ச்சனா கண்ணீர் விட்டு அழுதார். பிறகு காபி வித் டிடி நிகழ்ச்சியில் தான் என் விவாகரத்து தகவல் எனக்கு கிடைத்தது ரம்யா கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்.
நான் நிகழ்ச்சிக்கான முதல் லீடை சொல்ல இருந்த சமயம் எங்களுக்குள் இது சரி வராது விவாகரத்து செல்ல வேண்டும் என்று தகவல் கிடைத்தது. அதிலும் எனக்கு தான் அதிக பாதிப்பு காரணம் நான் தான் மீடியாவில் இருக்கிறேன் அதை எனக்கே கூறி கேட்டேன் நாம் தான் லைன் லைட்டில் இருக்கிறோம். தைரியமாக இருக்க வேண்டும் என்றார் அங்கே தான் என் வாழ்க்கை துவங்கியது அங்கேயே அது முடிந்து விட்டது என தெரிவித்தார்.
அதாவது இதே நிகழ்ச்சியின் போது தான் டிடியின் திருமணம் கோலாகலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பானது ஏராளமான திரை பிரபலங்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை அனைவரும் கலந்துக் கொண்டு இருந்தார்கள் எனவே டிடியின் வருங்கால கணவர் மற்றும் டிவி தொகுப்பாளர்கள் கலந்துக் கொண்டு புது மண தம்பதியினர்களை காபி வித் டிவி நிகழ்ச்சியில் வாழ்த்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.