பொதுவாக சின்னத்திரையில் தொகுப்பாளராக நீண்ட காலம் நிலைத்து நிற்பது மிகவும் கடினமான ஒன்று ஏனென்றால் அப்படி நீண்ட காலம் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் அவர்களிடம் ஏதாவது ஒரு திறமை இருக்க வேண்டும்.
அந்தவகையில் தனக்குள் பல திறமைகளை வைத்துக் கொண்டு இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இவர் முதன்முதலில் 1999ஆம் ஆண்டு உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர். அதன்பிறகு சன் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக தற்போது வரை பணியாற்றி வருகிறார்.
இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி காபி வித் டிடி ஜோடி நம்பர் ஒன் ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமடைந்து விட்டன. அதற்கு முக்கிய காரணம் தொகுப்பாளினி டிடி என்றே கூறலாம் அந்த அளவு அவரின் பங்கு அதிகமாக இருந்தது. தனது பணிகளை சிறப்பாக செய்துவரும் டிடிக்கு வாழ்க்கை மற்றும் சறுக்கலை சந்தித்தது.
ஏனென்றால் இவர் தன்னுடன் நண்பராக பழகிய ஒருவரை திருமணம் செய்துகொண்டு பின்பு ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் தற்பொழுது தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனியாக வாழ்ந்து வருகிறார். அதேபோல் மீண்டும் தன்னுடைய தொகுப்பாளினி வேலையை சிறப்பாக செய்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் வெள்ளை நிற உடையில் பால் நிறத்தில் ஜொலிக்கிறார் இதைப்பார்த்த ரசிகர்கள் 36 வயதிலும் 16 வயது பருவ மங்கை போல் இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.