தல ரசிகரின் போனை புடுங்கிய அஜித் குறித்து கருத்துச் சொன்ன டிடி.! நீ கொஞ்சம் மூடிட்டு போலாம் ரசிகர்கள் காட்டமான பதிவு.

ajith-dd

தல அஜித் தற்பொழுது வினோத் இயக்கத்தில் வலிமை  திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.  இந்த நிலையில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது இதில் பல பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அதிகாலையிலேயே தங்களின் வாக்கை பதிவு செய்தார்கள்.

அதேபோல் தல அஜித் அவர்களும் தன்னுடைய மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வாக்கு செலுத்த போனார்.  அப்பொழுது ரசிகர்கள் அஜித்தை சூழ்ந்து கொண்டார்கள் பலரும் செல்பி எடுத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தார்கள்.

அதில் ஒரு ரசிகர் முக கவசம் அணியாமலும் எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் அஜித்தை செல்பி எடுத்துள்ளார் அப்பொழுது அஜித் கோபப்பட்டு செல்போனை பிடுங்கி உள்ளார். அதன் பிறகு அஜித் செல்போனை அந்த ரசிகர் இடம் திருப்பிக் கொடுத்துவிட்டு அவருக்கு அறிவுரை வழங்கினார் அதுமட்டுமில்லாமல் அவருடன் செல்பி புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

அஜித் அந்த ரசிகருக்கு முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து சமூக வலைதளத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இந்த நிலையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றும் திவ்யதர்ஷினி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அஜித்தின் கஷ்டங்களைப் பற்றி தான் கூறியிருந்தார்.

அதாவது அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு எப்பொழுதுமே சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியவர் அதனால் அவரை ஓட்டுப் போடவது நிம்மதியாக விடுங்கள் என கூறினார். அதுமட்டும் இல்லாமல்  அஜீத் சாரின் பொறுமை நம்மை வியக்க வைக்கிறது எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார் இதை பார்த்த ரசிகர்கள் எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென தல அஜித்திற்கு தெரியும் நீங்க கொஞ்சம் மூடுங்கள் என காட்டமாக பதிவு செய்து வருகிறார்கள்.

dd-comment-about-ajith
dd-comment-about-ajith