ராஷ்மிகா மந்தனாவை டேமேஜ் செய்த டேவிட் வார்னர் – வீடியோவை பார்த்து கதறும் ரசிகர்கள்..

rashmika-mandanna

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக பார்க்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் நடித்து வருவதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல ரசிகர்களும் இவரைப் பெரிய அளவில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

ரசிகர்களையும் தக்க வைத்துக் கொள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா அவ்வபோது தனது சமூக வலைதள பக்கங்களில் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் தற்பொழுது புஷ்பா 2, வாரிசு போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதில் முதலாவதாக வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கிரிக்கெட்டையும் தாண்டி மற்றவற்றிலும் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக நடனம் ஆடுவது, பஞ்ச் டயலாக் பேசுவது போன்றவற்றை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

மேலும் முகத்தை எடிட் செய்து  வீடியோவாக வெளியிட்டு வருகிறார் இதனால் சமூக வலைதளத்தில் வார்னருக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது இப்பொழுது கூட டேவிட் வார்னர்..  நடிகை ராஷ்மிகா மந்தனா பாடலை ராஷ்மிகாவின் முகத்திற்கு பதிலாக தனது முகத்தை எடிட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

david warner
david warner

அந்த வீடியோவின் கீழ் கமெண்டில் ரஷ்மிகாவை டேக் செய்து “சாரி” என ஜாலியாகவும் வார்னர் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு வெகு விரைவிலேயே நடிகை ராஷ்மிகா மந்தனா தக்க பதிலடி கொடுப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்கள்..