தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலித்து வருபவர்தான் நடிகர் ரஜினிகாந்த் இவரை ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள் இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டே வருகிறது.
அந்தவகையில் சில நாட்களுக்கு முன்பாக நடிகர் தனுஷ் அவர்கள் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவை பிரிய போவதாக வெளிவந்த செய்தி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் குழந்தைகளுக்காவது அவர்கள் ஒன்றாக இணைய வேண்டுமென்று ரஜினிகாந்தும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.
ஆனால் அவர் எடுக்கும் முயற்சி ஒன்றுமே கைகூடவில்லை இதனால் பேரன்ங்களில் எதிர்காலத்தை நினைத்தும் மகளின் வாழ்க்கையை நினைத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார். இப்படி பிரச்சனை நடந்து கொண்டும் இருக்கும் நிலையில் ஐஸ்வர்யா இவை எதையும் கண்டுகொள்ளாமல் மகிழ்ச்சியாக தன்னுடைய வேலையை செய்து வருகிறார்.
தொடர்ந்து ஐஸ்வர்யா தங்கை சௌந்தர்யா ஒரு பஞ்சாயத்தை கூட்டி இருப்பதாக தெரியவந்துள்ளது அதாவது விவாகரத்து அறிவிப்பதற்காக ஐஸ்வர்யா ஒரு திரைப்படம் இயக்கிய விடுகிறார் அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தில் அவருடைய தங்கையின் கணவர் தான் ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
ஆனால் சௌந்தர்யாவுக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என தெரியவந்துள்ளது இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது மட்டுமில்லாமல் இதனை சமாளிக்க முடியாமல் தனது அப்பாவிடம் சௌந்தர்யா இந்த பிரச்சனையை எடுத்துக் கூறி உள்ளார்.
ஏற்கனவே தன்னுடைய இரண்டாவது மகள் முதல் திருமணம் சரியாக அமையாததன் காரணமாக இரண்டாவது திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் தற்போது இதிலும் ஒரு பிரச்சனை வந்துவிடுமோ என சூப்பர்ஸ்டார் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தெரியவந்துள்ளது.