பி வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் 1992-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ரிக்ஷா மாமா. இந்த திரைப்படத்தில் கௌதமி நடித்து அறிமுகமான முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் ரஜினியுடன் பணக்காரன், மீண்டும் ரஜினியுடன் குருசிஷ்யன், கமலுடன் அபூர்வ சகோதரர்கள் மீண்டும் கமலுடன் தேவர்மகன் மற்றும் பல டாப் நடிகர்களுடன் நடித்து பிரபலம் அடைந்தார் கௌதமி.
இப்படி சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் வேறு வழி இல்லாமல் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்,ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை என பலவற்றில் பங்குகொண்டு அசத்தினார்.
இருப்பினும் வயசு ஆக ஆக அனைத்திலிருந்தும் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் பறிபோயின.இப்பொழுது மீடியா பக்கம் பெரிய அளவில் தென்படவில்லை என்றாலும் இவரைப் பற்றிய பேச்சுக்கள் பரவி கொண்டுதானிருக்கிறது நடிகை கௌதமி 1998ஆம் ஆண்டு சந்திப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஒரு வருடமே ஆன நிலையில் 1999ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர் இந்த இருவருக்கும் சுபலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறாள். கௌதமி தற்பொழுது தனது மகளை பாதுகாத்துக் கொண்டு வருகிறார். இப்படி இருந்த நிலையில் 2004 ஆம் ஆண்டு கமலுடன் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வந்தார் பின் புற்று நோயால் பாதிக்கப்பட்ட கௌதமி. அனைத்து உதவிகளையும் கமல் செய்திருந்தார்.
2016ஆம் ஆண்டு கமலஹாசனுடன் இருந்து விலகினார் தற்போது கௌதமியும், அவரது மகளும் தனியாக வாழ்ந்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் தனது மகள் சுப்புலட்சுமியுடன் லேட்டஸ்டாக கௌதமி புகைப்படம் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஹீரோயின் போல் இருக்கும் கௌதமியின் மகள்.இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..