பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய மகளுடன் கலந்து கொண்டுள்ளார் அப்பொழுது அங்கு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கம் ஆன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய இசை மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இவர் தன்னுடைய இசையின் மூலம் பல விருதுகளை வென்றுள்ளார். இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் தற்பொழுது திரைப்பட விழா ஒன்று நடைபெற்று வருகிறது இந்த திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தமிழக திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
அந்த வகையில் கமலஹாசன் ஏ ஆர் ரகுமான் மாதவன் பூஜா ஹெக்டே பார்த்திபன் என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த திரைப்பட விழாவில் ஏ ஆர் ரஹ்மான் அவர்களும் தன்னுடைய மகளுடன் பிரான்ஸ் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார் அப்பொழுது பிரான்ஸ் நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் தந்தை மகள் உறவு குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதற்கு பல ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள் மேலும் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.