உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் எந்த ஒரு நடிகராலும் தர முடியாது அளவிற்கு தரமான திரைப்படங்களை தந்து வருகிறார். இதன் காரணத்தினால் இவருடைய திரைப்படங்களுக்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
அப்படி இவருடைய நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவையே அதிர வைத்த திரைப்படம் தான் தசாவதாரம். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்து மிரட்டி இருந்தார். இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இவருடன் இணைந்து இந்த படத்தில் அசின், நெப்போலியன், நாகேஷ், ஜெயப்பிரியா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தார்கள். மாபெரும் அளவில் வெற்றி நடை போட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
அந்த வகையில் கமலஹாசன் அவர்களுடைய திரை வாழ்க்கையில் வெளியாகிய திரைப்படங்களில் முதலில் இந்த திரைப்படம் தான் ரூபாய் 100 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரூபாய் 100 கோடி வசூல் செய்த தசாவதாரம் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதாவது இந்த படத்தினை முதலில் தயாரிக்க முடிவு செய்த பொழுது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் ரூபாய் 20 கோடி பட்ஜெட் போட்டார்கள். ஆனால் இந்த படத்தின் கதை நீண்டு கொண்டே போக ரூபாய் 30 கோடி ஆனதாம். அதன் பிறகு மீண்டும் இந்த கதையின் நீளம் காரணமாக இறுதியாக ரூபாய் 45 கோடியில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் முடிந்ததாம்.
இவ்வாறு இது குறித்து கே.எஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இவ்வாறு கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தற்பொழுது வரையிலும் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காமல் இருந்து வருகிறது. அந்த வகையில் கமலஹாசனுக்கும் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.