Box office : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல நடிகர்கள் வலம் வருகிறார்கள் இவர்களின் திரைப்படம் மிக எளிதாக 200 கோடியை கடந்து விடுகிறது இன்றைய காலகட்டத்தில் 200 கோடி என்பது மிக எளிதாகிவிட்டது என்னதான் இன்று ரஜினி, விஜய், அஜித் ஆகியோர்களின் திரைப்படம் 200 கோடி வசூலித்தால் கொண்டாடுகிறார்கள் ஆனால் இதற்கெல்லாம் ஆணிவேரா இருந்தது உலகநாயகன் கமலஹாசன் தான்.
இன்று வேணால் 200 கோடி வாசூலை ரஜினி, அஜித், விஜய் என அனைவரும் மிக எளிதாக கடந்து விடலாம் ஆனால் இதற்கு முன்பு முதன்முறையாக தமிழ் சினிமாவிலேயே 200 கோடி வசூலைத் தொட்ட ஒரே நடிகர் உலகநாயகன் கமலஹாசன் தான். 2008 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் கமலஹாசனின் தசாவதாரம் இந்த திரைப்படத்தை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியாது.
ஏனென்றால் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் பல கெட்டப்களில் அசத்தியிருந்தார். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தசாவதாரம் இந்த திரைப்படத்தை v ரவிச்சந்திரன் அவர்கள் தயாரித்திருந்தார். படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து அசின், ஜெயப்பிரதாப், மல்லிகா ஷெராவத், கே ஆர் விஜயா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக 200 கோடி வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை அடைந்தது.
இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் அவர்கள் இசையமைத்து இருந்தார் அப்பொழுது 200 கோடி வசூலித்த தசாவதாரம் இன்றைய காலகட்டத்தில் இப்பொழுது கணக்குப் போட்டு பார்த்தால் 555 கோடி வசூல் இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வல்லுனர்கள் கணித்துக் கூறியுள்ளார்கள். சினிமாவில் அதிக கெட்டப்களில் நடித்த முதல் ஹீரோ நம்பியார் அதன் பிறகு கமலஹாசன் தான் பல கெட்டப்புகளில் ஒரே திரைப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.