இலங்கை பெண்ணான லாஸ்லியா அங்கே செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்து வந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி தனது திறமையின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் உடன் இணைந்து இவர் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இவர்களுடன் இணைந்து சதீஷ் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் வெகுவிரைவிலேயே திரையரங்கில் வெளிவர காத்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அவர் பிக் பாஸ் தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது என்றாலும் தர்ஷனும் லாஸ்லியாவும் மிக நெருக்கமாக இருக்கும் படுக்கையறை காட்சிகள் அதில் இடம் பெற்றன. இவை ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
பிக் பாஸ் வீட்டில் அண்ணன் தங்கையாக வலம்வந்த இருவரும் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை மேலும் இவ்வாறு எடுத்தவுடனேயே படங்களில் நடிப்பதால் ரசிகர்களை தாண்டி மக்களும் அதை விரும்பவில்லையாம்.
ஒரு மிகப்பெரிய விஷயமாக மாறுவதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் நடிகை லாஸ்லியா படத்தை படமாக பாருங்கள் நிஜவாழ்க்கை உடன் ஒப்பிடாதீர்கள். எனக்கு தர்ஷன் அண்ணன் மாதிரிதான். படத்திற்காக அப்படி வரும் காட்சிகள் வெறும் நடிப்பிற்காக தான் நடித்தோம்.
அந்த மாதிரியான காட்சிகள் படமாக்கும் பொழுது நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டே செம ஜாலியாக தான் எடுத்து கொடுத்தோம் என இந்த கட்சிகளுக்கு பதிலளித்தார் லாஸ்லியா.