பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த காமெடி சமையல் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு பிரபலமாகி உள்ளார்கள்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலம் ஆவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இந்த நிகழ்ச்சியில் காமெடி அதிக அளவு இருப்பதுதான் காரணம்.அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் இதுவரை இரண்டு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 3வது சீசன் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான போட்டியாளர்கள் ஏராளமாக உள்ளார்கள் அவர்கள் அனைவரும் தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என கொடி கட்டிப் பறப்பது மட்டுமில்லாமல் தற்பொழுது கதாநாயகியாகவும் கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகை தர்ஷா கூட வெள்ளித்திரையில் கதாநாயகியாக திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் யோகி பாபு நடிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றில் தர்ஷா நடிக்க கமிட்டாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு இந்த திரைப்படத்தை இயக்குனர் ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ், ஏ 1 ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆவார்.
இந்த நிலையில் அவர் மெடிக்கல் மிராக்கல் என்ற திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்திற்கு கதாநாயகி தேர்வு நடத்தப் பட்ட நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு நடிகை தர்ஷா குப்தா ஒப்புக்கொண்டுள்ள தெரியவந்துள்ளது.