கழுத்தில் தாலியுடன் மணப்பெண் கோலத்தில் தர்ஷா குப்தா.! மாப்பிள்ளை யார் என்று பார்த்தீர்களா.!

dharsha-kupta

மாடலிங் துறையில் பணியாற்றி வந்தவர் தான் தர்ஷா குப்தா அதன்பிறகு சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். இவர் விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜீ தமிழ் தொலைக்காட்சி என பல முன்னணி தொலைகாட்சி சீரியலில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் சீரியலில் நடித்து வந்த இவர் போகப்போக சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர்.

தற்பொழுது இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி விட்டார். இவர் நடித்த சீரியல் அவளும் நானும்,  முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, மின்னலே ஆகிய சீரியலில் நடித்துள்ளார் எப்பொழுதும் கனகச்சிதமாக தனது உடலை வைத்துக்கொள்ள வேண்டும் என அதிக ஆர்வம் காட்டி வருபவர் அதனால் ஒர்க்கவுட் அடிக்கடி செய்து வருவார்.

அதேபோல் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இவர் வெளியிடும்  புகைப்படத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் காத்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இவர் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து விடுவார்.

மேலும் இவர் வெளியிடும் புகைப்படத்தின் மூலம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரவுபதி இயக்குனர் இயக்கி வரும் ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதன் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது. இந்தநிலையில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள திருமண காட்சியில் தனது சக நடிகருடன் திருமண கோலத்தில் தர்ஷா குப்தா  நடித்துள்ளார்.

இதனைப் பார்த்த சிலர் தர்ஷா குப்தா அவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டதா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.? மேலும் இந்த புகைப்படம்  இவர் நடித்து வரும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

dharsha-kupta
dharsha-kupta