தமிழ் திரையுலகில் அஜித் மனைவியுடன் பிறந்தவர் தான் ரிஷி ரிச்சர்ட் இவர் சென்ற வருடம் மோகன்.ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார் மேலும் அந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
இதனையடுத்து மீண்டும் இயக்குனர் மோகன்.ஜி அவர்களுடன் ரிஷி ரிச்சர்ட் இணைந்துள்ளார் ஆம் மோகன்ஜி இயக்கத்தில் தற்போது இவர் காவல்துறை அதிகாரியாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடித்து வரும் இந்த திரைப்படத்தில் இவருக்கு மனைவியாக விஜய் டிவியின் மூலம் பிரபலமடைந்த குக் வித் கோமாளி புகழ் தர்ஷா நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து தர்ஷா நடிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் தர்ஷா குடும்ப பெண்ணாக இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்.
🥰Rudhrathandavam Aarambam🥰 pic.twitter.com/v7MPzOViKe
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) January 13, 2021