தமிழ் சினிமாவில் எத்தனையோ வில்லன் நடிகர் இருந்தாலும் தானும் ஒரு மிரட்டல் வில்லன் என்ற அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் டேனியல் பாலாஜி இவர் திடீரென நேற்று இரவு மாரடை மரணம் அடைந்தார் இவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகநேரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கு தனி அடையாளம் கொடுத்த நடிகர்களில் இவரும் ஒருவர்.
டேனியல் பாலாஜி திரைத்துறையில் கால் தடம் பதித்தது நடிகராக அல்ல கமலஹாசன் தயாரித்த மருதநாயகம் திரைப்படத்தில் ப்ரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றினார் சித்தி சீரியல் மூலம் நடிகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அந்த சீரியலில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் தனி முத்திரை பதித்ததால் பாலாஜி என்ற பெயர் நாளடைவில் டேனியல் பாலாஜி என்று மாறியது.
ஒரு வழியாக சரவணனுக்கு தங்கமயில் கிட்டியது!! ஆனா பொண்ணுக்கு தான் பிடிக்கல.. அடுத்தது என்ன நடக்குமோ..
இதனை தொடர்ந்து ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவான ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து காதல் கொண்டேன் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படத்தில் சூர்யாவின் நண்பராகவும் காவல்துறை அதிகாரியாகவும் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் டேனியல் பாலாஜி மிகவும் கௌதம் மேனனை கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து வேட்டையாடு விளையாடு என்ற திரைப்படத்தில் வில்லனாக அவரை நடிக்க வைத்தார் அந்த திரைப்படம் இன்று வரை ரசிகர் மத்தில் மிகவும் பிரபலம் அதிலும் வில்லன் கதாபாத்திரத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது மேலும் பொல்லாதவன் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார் மேலும் டேனியல் பாலாஜி வில்லனாக மறுமுகம், ஞான கிறுக்கன், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, பைரவா, இப்படை வெல்லும், மாயவன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பல நடிகர்கள் தனக்கு கிடைத்த பட வாய்ப்பு நழுவ விடக்கூடாது என நடித்து வருவார்கள் ஆனால் தனக்கு ஏத்த கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே டேனியல் பாலாஜி நடித்து வந்தார் அந்த வகையில் வடசென்னை திரைப்படம் மிக முக்கிய திரைப்படமாக அவரின் கேரியரில் அமைந்தது ஆனந்தம் விளையாடும் வீடு என பல திரைப்படங்களில் நடித்திருந்தால் கடைசியாக அவர் நடித்த திரைப்படம் அறியவன்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பழமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். ஆனால் இவர் வில்லனாக நடித்தது தாண்டி ஹீரோவாக அதாவது நடிகர் ஸ்ரீகாந்த் இயக்கிய முத்திரை என்ற திரைப்படத்தில் நித்தின் சத்தியா உடன் இணைந்து நாயகனாக நடித்திருந்தார் திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை அதன் பிறகு மீண்டும் வில்லனாகவே களமிறங்கினார்.
49 வயதாகியும் டேனியல் பாலாஜி திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து வந்தார் பலமுறை தனது தாயார் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தார்கள் ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் தனக்கு திருமணம் செட்டாகவே ஆகாது என 25 வயதிலேயே திருமணம் வேண்டாம் என முடிவு செய்து கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை இவர் முரளியின் மாமன் மகன் டேனியல் பாலாஜி மறைவிற்கு ரசிகர்களும் தனி பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.