தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய பிரபலமானவர் தான் மாஸ்டர் கலா. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட்டு கொடுத்துள்ளது அந்த வகையில் தற்போது பல நடிகர்களின் திரை படத்தில் இவர்தான் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
இவ்வாறு திரைப் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றுவது மட்டுமல்லாமல் பிரபல தனியார் தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியில் கூட நடுவராக பணியாற்றி வருகிறார்.
இவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வரும் நமது கலா மாஸ்டர் அவ்வப்போது நடனம் ஆடுவர் களுக்கு நல்ல அறிவுரைகளை கூறுவதில் வல்லமை பெற்றவர் அது மட்டுமல்லாமல் சிறந்த நடன கலைஞர்களுக்கு எங்கரேஜ் செய்யும் விதமும் வித்யாசமாக இருக்கும்.
அந்த வகையில் இவர் மானாட மயிலாட, சூப்பர் டான்சர், சூப்பர் டான்சர் ஜூனியர், ஓடி விளையாடு பாப்பா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி உள்ளார். இவர் மட்டுமின்றி அவருடைய தங்கை பிருந்தாகும் ஒரு நடனக் கலைஞர் தான்.
அந்த வகையில் கலா மாஸ்டர் அவர்கள் யோகி பாபு மற்றும் கலா மாஸ்டரின் கணவர் என அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள் இவ்வாறு வெளிவந்த புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் இப் புகைப்படத்தை வெளியிட்ட யோகி பாபு அவர்களுடன் இருந்த சில அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இதோ யோகி பாபு கலா மாஸ்டரின் குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.