சின்னத்திரை நடிகை சித்ராவை பற்றி தினமும் ஒரு திடுக்கிடும் தகவல் தற்போது வரை வெளிவந்து கொண்டிருக்கிறது மேலும் சித்ரா சமீபத்தில் இருந்தது அப்பா, அம்மாவை வருத்தத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் அவருடன் பழகி வந்த நண்பர்கள்,உறவினர்கள் என பலரும் அவரது இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சின்னத்திரை நடிகை சித்ரா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார் இதன் மூலமாக இவர் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வந்தார்.
பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்புக்காக சென்னையில் உள்ள நசரத்பேட்டை விடுதியில் தனது வருங்கால கணவருடன் தங்கியிருந்தார் பின்பு ஒருசில காரணங்கள் குறித்து சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.
சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி தான் Start Music இந்த நிகழ்ச்சியில் சித்ரா தனது நண்பர்களுடன் ஆடியது, பாடியது என மகிழ்ச்சியாக இருந்தார்.
அதேபோல அந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது ஒரு வீடியோ காணொளி வெளிவந்துள்ளது அந்த வீடியோவில் சித்ரா நான் ரெடி நீங்க ரெடியா என பாட்டுப்பாடி ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்.
அந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த விடியோவை பார்க்கும் பொழுது கண் கலங்குகிறது என்று கூறிவருகிறார்கள்.
— Vijay Television (@vijaytelevision) December 20, 2020