தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கு முன்பும் நெல்சன் திலிப்குமார் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
பிஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்ணா தாஸ் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்துள்ளார்.
காதலர் தினத்தில் வெளியாகிய பீஸ்ட் திரைப்படத்தின் பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி அனைவரையும் ஆட வைத்தது அரபி குத்து பாடலுக்கு பல சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் ரசிகர்கள் என அனைவரும் நடனமாடி வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். பீஸ்ட் திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் சன் பிக்சர் நிறுவனம் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் எப்போது வரும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. அதேபோல் ஏப்ரல் 10ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் பீஸ்ட் படக்குழுவினர் பேட்டி கொடுக்க இருக்கிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அமெரிக்காவில் மட்டும் பீஸ்ட் திரைப்படம் ஒரு நாள் முன்னதாகவே அதாவது ஏப்ரல் 12-ம் தேதியே ரிலீசாக இருக்கிறது. பீஸ்ட் படத்தின் பிரிமியர் காட்சிகள் ஒரு நாளைக்கு முன்பே ரிலீஸ் ஆக இருப்பதால் அதனை அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள நிறுவனம் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதேபோல் இந்த காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. இந்தியாவில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பீஸ்ட் திரைப்படம் அமெரிக்காவில் ஒரு நாளைக்கு முன்பே ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.