வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் ஹீரோ நடிகர் கவின். இவர் முதலில் சின்னத்திரையில் “கனா காணும் காலங்கள்” என்னும் சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். அதன் பிறகு சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார் இப்படி ஓடிக்கொண்டிருந்த..
இவர் திடீரென வெள்ளித்திரையில் “நட்புன்னா என்னன்னு தெரியுமா” படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் மீண்டும் சின்ன திரைக்கு வந்தார்.
திடீரென விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் இவரால் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற முடியவில்லை என்றாலும் பிக் பாஸ் வீட்டிலிருந்தவரை இவர் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு செம என்டர்டெயின்மென்ட் கொடுத்தார்.
அந்த அளவிற்கு பிக் பாஸ் வீட்டில் கெத்து காட்டினார் கவின் வெளியே வந்த அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர் மேலும் வெள்ளித்திரை வாய்ப்பு குவிந்தது. முதலாவதாக “லிப்ட்” படம் இவருக்கு சுமாரான வெற்றியை தேடி தந்தது அதன் பிறகு பல்வேறு படங்களில் கமிட் ஆனாலும் எந்த ஒரு படமும் வெளிவராமல் இருந்தது. சிறு இடைவெளிக்கு பிறகு..
அம்பேத் குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவான “டாடா” திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலில் சக்க போடு போட்டது. அந்த அளவிற்கு படம் பிரமாதமாக இருந்தது குறிப்பாக கவின் மற்றும் ஹீரோயின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக டாடா திரைப்படம் ஒட்டுமொத்தமாக சுமார் 12 கோடி வசூலித்துள்ளதாம்.