கவின் நடித்த “டாடா” திரைப்படம் எப்படி இருக்கு.. ஹச். வினோத் கொடுத்த விமர்சனம்.!

dada
dada

இயக்குனர் ஹச். வினோத் தமிழ் சினிமா உலகில் இதுவரை விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் படங்களை எடுத்திருக்கிறார் ஆனால் அந்த படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்கள் தான் முதலில் சதுரங்க வேட்டை படத்தை எடுத்து தன்னை வெளி காட்டினார்.  அதன் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை..

வலிமை என அடுத்தடுத்த படங்களை கொடுத்த இவர் கடைசியாக நடிகர் அஜித்துடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து எடுத்த படம் தான் துணிவு. இந்த படம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆகியது. ரசிகர்கள் ஆரம்பத்திலேயே இந்த படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

பிறகு மக்களுக்கும்  துணிவு திரைப்படம் ரொம்ப பிடித்துப் போனால் கூட்டம் கூட்டமாக பார்த்தனர். இதனால் அனைத்து இடங்களிலும் துணிவு படத்தின் வரவேற்பு அதிகரித்ததால் வசூலும் நன்றாகவே அள்ளியது இதுவரை மட்டுமே 250 கோடிக்கு மேல் அள்ளி உள்ளது.

வருகின்ற நாட்களில் இன்னும் சில கோடிகளை அள்ளி அசத்தும் என கூறி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு படத்தின் இயக்குனர் ஹச். வினோத் இன்று கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தை பார்த்து விட்டு வெளியே வந்து தனது விமர்சனத்தை கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது..

முதலில் இயக்குனருக்கு பெரிய வாழ்த்துக்கள் க்ரைம், ஆக்சன் மாதிரி எளிதாக ஒரு படம் எடுக்காமல் நல்ல கதையை அழகாக ரொம்ப நல்லா படம் எடுத்திருக்கிறார். இந்த படம்  பெருசா ஜெயிக்கணும் வாழ்த்துக்கள் அம்பேத் சாருக்கும் கவினுக்கும் இந்த படம் பெருசா வெற்றி பெற வேண்டும் என இயக்குனர் ஹச். வினோத் வாழ்த்தியுள்ளார்.