நடிகர் கவின் இப்பொழுது நல்ல படங்களில் நடித்து வந்தாலும்.. முதலில் சின்னத்திரையில் தான் தனது பயணத்தை தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து தன்னை வெளிகாட்டினார். அதன் பிறகு தாயுமானவன், சரவணன் மீனாட்சி, வேட்டையாடு விளையாடு என ஓடிக்கொண்டிருந்த..
இவர் 2019 ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக களம் இறங்கினார் இதில் தனது முழு திறமையை வெளிக்காட்டி வெளிவரும்போது தனக்கென ஒரு கூட்டத்தை கட்டமைத்தார் அதன் பிறகு வெள்ளித்திரை வாய்ப்புகளும் ஏராளமாக குவிந்தன. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தாலும் அந்த படங்கள் வெளி வராமல் இருந்தன இது கவினுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது..
பல தடைகளை தாண்டி கவின் நடித்த “டாடா” திரைப்படம் நேற்று கோலாகலமாக வெளியானது. இந்த படம் முழுக்க முழுக்க காமெடி, சென்டிமென்ட், காதல் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக உருவாகி இருந்தது இதில் கவின், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், பாக்யராஜ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர்.
படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது குறிப்பாக பிரபலங்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் “டாடா” திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் அள்ளியது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பார்க்கையில் கவினின் “டாடா” திரைப்படம் முதல் நாள் மட்டுமே உலக அளவில் 1.5 கோடி வசூல் செய்துள்ளது நிச்சயம் வருகின்ற நாட்களில் டாடா திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளி சாதிக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.