டாடா படத்தின் வெற்றியை நினைச்சு சிரிப்பதா.. குடும்பத்தை நினைத்து வருத்தப்படுவதா.. கவின் பேச்சு

kavin
kavin

நடிகர் கவின் முதலில் கனா காணும் காலங்கள் என்னும் சீரியலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பிரபலமடைந்தார் அதன் பிறகு சரவணன் மீனாட்சி போன்ற சின்ன சின்ன சீரியல்களில் நடித்து ஒரு வழியாக வெள்ளித்திரையில் நட்புன்னா என்னன்னு தெரியுமா.. படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு பெரிய அளவு சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் சின்ன திரையில் அவ்வ்பொழுது தலை காட்டினார் அப்படித்தான்  பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தனது முழு திறமையும் வெளிக்காட்டினார் வெளியே வந்த அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர் மேலும் வாய்ப்புகளும் குவிந்தது. முதலில் “லிப்ட்” படத்தில் நடித்தார். இந்த படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று கவினிக்கு நல்ல ஒரு இமேஜை உயர்த்தி கொடுத்தது அதனைத் தொடர்ந்து டாடா படத்தில் நடித்தார். கடந்த 10 ஆம் தேதி டாடா படம் உலகம் முழுவதும் ரீலிஸ் ஆனது.. படம்  முழுக்க முழுக்க காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடுகிறது அதன் காரணமாக வசூலிலும் எந்த குறையும் வைக்கவில்லை என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் டாடா பட ஹீரோ கவின் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.

ஹீரோவான பிறகும் மிடில் கிளாஸ் வாழ்க்கையே வாழ்ந்து வருவதாகவும் இன்று வரை தான் வாடகை வீட்டில் தான் வசித்து வருவதாகவும் கவின் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும் பேசிய அவர் லயோலா கல்லூரியில் படித்தாலும் அரியர் கிளியர் செய்ய முடியாததால் இன்றளவும் டிகிரி வாங்க முடியவில்லை என்ற தகவலையும் அந்த பேட்டியில் வெளிப்படையாக உடைத்து இருக்கிறார்.