கவின் நடிப்பில் உருவாகி கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் தான் டாடா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் ஒலிம்பியா மூவி சார்பில் தயாரிப்பாளர் அம்பேத்குமார் தயாரிப்பில் டாடா படம் உருவாகி இருந்தது.
மேலும் இந்த படத்தினை அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக நடிகை அமர்ணா தாஸ் நடித்திருந்தார். இவர்களை அடுத்து பாக்யராஜ், ஐஸ்வர்யா, ஹரிஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இவ்வாறு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தினை எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய ஜென்மார்ட்டின் இசையமைப்பில் கதிரேஷ் அழகேசன் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டு உள்ளார்கள். இவர்களைத் தொடர்ந்து சண்முகராஜ் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது.
பெரிதாக சொல்லும் அளவிற்கு டாடா பாடம் இருக்காது என கருத்துக்கள் கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளியாகிய அந்த படம் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. பலரும் கவின் மற்றும் இயக்குனருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில் தற்போது இயக்குனர் கணேஷ் கே பாபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல் பலரையும் வியக்க வைத்துள்ளது.
அதாவது ரிட்டர் பக்கத்தில் வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை பதிவு செய்துள்ள கணேஷ் கே பாபு அதில் அவருடைய கல்லூரி தோழி ஒருவர் டாடா படம் பார்த்துவிட்டு அனுப்பிய மெசேஜை கூறியுள்ளார். அதில் படம் சிறப்பாக இருந்ததாகவும் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ள நிலையில் ஒரு தாயாக தனது குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் டாடா படம் பார்த்த பின்னர் தனது கணவருடன் இணைந்து வாழ விருப்பப்படும் அவர் அதற்காக ஏதேனும் காரணங்கள் தேடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த ஸ்கிரீன்ஷாட்டை கணேஷ் கே பாபு இதுதான் எனக்கு நிஜமான வெற்றி இவர் என்னுடைய கல்லூரி நண்பர்களில் ஒருவர் டாடா படத்தில் கிடைத்த சிறந்த விமர்சனம் இதுதான் டாடா படத்தை எங்களுக்கு ஸ்பெஷலாக மாற்றி அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்