தற்பொழுது உலக அளவில் சினிமாவில் கலக்கி கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த அசுரன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதால் இத்திரைப்படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் எங்கேயோ போய் உள்ளது.
எனவே இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால் தற்பொழுது முக்கிய இயக்குனர்களின் திரைப்படத்தில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜகமே தந்திரம் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்கள் வெளியாவதற்கு தயாராக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க மித்ரன் ஜவஹர் இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க வேண்டும் என்பதற்காக மிகவும் விறுவிறுப்பாக இத்திரைப்படத்தின் நடிப்பதற்காக நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.
அந்தவகையில் இத்திரைப்படத்தில் முக்கிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அது வேறு யாருமில்லை தனுஷின் D44 திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
#Bharathiraja joins the cast of #D44.@dhanushkraja @anirudhofficial pic.twitter.com/uCTWeXofLj
— Sun Pictures (@sunpictures) August 4, 2021