Santhanam : தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்குபவர் டி ஆர் என்கின்ற டி ராஜேந்திர் இவர் முதலில் ஒரு தலை ராகம் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு திரை உலகில் தன்னை ஒரு இயக்குனராகவும் வெளிகாட்டிக்கொண்டார் வசந்த அழைப்புகள், ரயில் பயணம், நெஞ்சில் ஒரு ராகம், உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதலி என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து பிரபலமடைந்தார்.
இப்படிப்பட்ட டி ராஜேந்தர் வயது முதிர்வின் காரணமாக தற்பொழுது படங்களில் நடிக்கவில்லை ஆனால் அவரை தொடர்ந்து அவரது மகன் தொடர்ந்த சினிமா உலகில் வெற்றி படங்களை கொடுக்க ஓடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் டி ஆர் ராஜேந்திர் பற்றி சந்தானம் பேசியது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.
டி ராஜேந்தர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்பொழுதுமே பரபரப்பாக இருப்பார். காட்சி நல்ல முறையாக வர எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லித் தருவார் எத்தனை டேக்குகள் வந்தாலும் எடுப்பார் ஆனால் அதேசமயம் அந்த அளவிற்கு கோபமும் படக்கூடியவர். டி ராஜேந்தர் ஒரு படத்தை எடுத்தார் அதில் நானும் (சந்தானம்) நடித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள் ஹீரோ, ஹீரோயினை வைத்து பாடல் எடுக்க வேண்டும்.. நீச்சல் குளத்திற்கு அந்த சைடு ஹீரோ ஹீரோயின் இருக்க இங்கு நாங்கள் கேமராவை வைத்து எடுத்துக் கொண்டிருந்தோம். டேக் ரெடியானது ஆனால் ஹீரோ ரியாக்ஷனை பண்ணாமல் அப்படியே இருந்தார் டி ராஜேந்தர் ரியாக்ஷன் எல்லாம் சொல்லி பார்த்தார் ஆனால் அந்த ஹீரோ மும்பை ஹீரோ என்பதால் இவர் சொல்லுவது ஒண்ணுமே புரியவில்லை..
உடனே இதோ வரன் டா என்று சொல்லிவிட்டு டி ராஜேந்தர் நீச்சல் குளத்தில் குதித்து நீந்திய படியே அந்த ஹீரோ கிட்ட போய் பளார் பளார்னு ரெண்டு மூணு அடி அடித்துவிட்டார். பெண்களை அவர் தொட மாட்டார் என்பதால் சந்தானத்தை அழைத்து ரொமான்ஸ் இப்படி செய்ய வேண்டும் என்று ஹீரோயினிடம் சொல்லிக் காட்ட சொன்னாராம் பிறகு டி ராஜேந்தர் மீண்டும் நீச்சல் குளத்திலேயே குதித்து நீச்சல் நீந்தி போனார். சந்தானம் மற்றவர்கள் எல்லாம் நீச்சல் குளத்தை சுற்றி வந்தார்கள்.
கேமரா கிட்டக்க போன டி. ராஜேந்தருக்கு துண்டை கொடுத்தார்களாம் ஆனால் அவர் அந்த ஈரத்தையும் பொருள்படுத்தாமல் அந்த காட்சியின் மீது கவனமாக இருந்தாராம் இப்படி ஒவ்வொரு காட்சிக்காகவும் பல ரிஸ்குகளை எடுக்கக்கூடியவர் டி. ராஜேந்தர் என கூறினார். அவருடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் என சந்தானம் தெரிவித்தார்.