சின்னத்திரையில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் தொடங்கி தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது இந்த ஐந்து சீசன்களிலும் வெவ்வேறு துறையில் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி ஃபைனல்ஸில் ஒருவர் வெற்றி பெறுவார்.
இந்த நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகின்றன தொடர்ந்து ஐந்து சீசன் களையும் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அடுத்து தொடங்க உள்ள பிக்பாஸ் 6வது சீசனை கமல் தொகுத்து வழங்குவாரா என்ற தகவல் இன்னும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 6வது சீசன் வருகின்ற ஜூலை மாத இடையில் அல்லது ஆகஸ்ட் மாத முதலில் தொடங்கும் என தகவல் வெளியாகியது. அதனால் தற்போது இந்த சீசனில் கலந்து கொண்டும் போட்டியாளர்களை தேர்வு செய்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் டி இமான் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் 13 ஆண்டுகளாக குடும்ப வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வந்த இமான் மற்றும் மோனிகா இருவரும் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இமான் உடனடியாக சில மாதங்களிலேயே அமிலீ என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் கூடிய விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ் 6 வது சீசனில் இமானின் முதல் மனைவி மோனிகா கலந்து கொள்ள உள்ளதாக சில தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன ஆனால் இதுகுறித்து இன்னும் மோனிகா எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை