தமிழ் சினிமாவில் குடும்பங்களை கவரும்படியான படங்களுக்கு இசையமைத்து சினிமாவில் தன்னை வெளிக்காட்டி கொண்டவர் டி. இமான். விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்ற படத்தில் இசை அமைத்து அதன் மூலம் தனது இசை பயணத்தை மேற்கொண்டார்.
அதன் பிறகு கிராமத்து சாயலில் உள்ள படங்களை பெரிதும் டி. இமான்னுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை இறுக்கமாக பிடித்து சரியான பாதையில் பயணித்தார். அந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி ஹிட் அடித்தன அந்த வகையில் இவர் இசை அமைத்த மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் இவரை உச்சத்தில் தூக்கி விட்டது.
இதனால் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். டி.இமான் இதுவரை சினிமா உலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டி. இமான் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்தாலும் அஜித்துடன் இணைந்து இசை அமைக்காமல் இருந்தது.
அவருக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்து வந்த நிலையில் அஜித்துடன் இணைந்து விசுவாசம் படத்தில் இணைய வாய்ப்பு கிடைத்தது அதை இறுக்கி பிடித்துகொண்டார். விஸ்வாசம் படத்தில் பயணித்தார்.
இந்த படம் வெளிவந்து சூப்பர் டுப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் முக்கிய நடிகர் நடிகைகளின் நடிப்பு சிறப்பம்சமாக இருந்தாலும் இந்த படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலும் வெற்றி பெற உதவியது. இந்த பாடல் மிகப்பெரிய உச்சத்தை தொட்டது. இந்தப் பாடலுக்கு சிறப்பாக இசையமைத்ததன் மூலம் அவர் தேசிய விருதையும் கைப்பற்றினார்.
விசுவாசம் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அவர் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார் இந்த படம் தற்போது வெளியாக ரெடியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் தனது அழகிய குழந்தைகளுடன் டி. இமான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த அழகிய புகைப்படம்.