சினிமாவுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பிரபலங்கள் தொடர்ந்து வெற்றியை பெற்று வந்தாலும் நிஜ வாழ்க்கையில் சில சறுக்கல்களை சந்திப்பது வழக்கம் அந்த வகையில் நடிகர் தனுஷ் திருமணம் செய்து கொண்டு சில வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்று தற்போது பிரிந்து உள்ளார்.
சமந்தாவும் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகர்கள் படங்களுக்கு இசை அமைத்து தேசிய விருதெல்லாம் பெற்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் டி இமான் இவர் முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
அது விவாகரத்து பெற்று பிரிந்து நிலையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற தகவல்கள் அடிக்கடி இணையதளத்தில் பரவி வந்தது இது குறித்து அவரும் எனக்கு வரப்போற பெண் என்னை முதலில் பார்த்துக்கொள்கிறாரோ இல்லையோ எனது குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளக்கூடிய ஒரு பெண்தான் வேண்டும் என கூறியிருந்தார்.
அதற்கு ஏற்றபடி சென்னையில் ஒரு பெண்ணை ஏற்கனவே இமான் பார்த்திருந்தார். இருவருக்கும் ரொம்ப பிடித்துப் போகவே வெகுவிரைவிலேயே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் பேசப்பட்டு வந்தன இப்படி இருக்கின்ற நிலையில் திடீரென டி இமான் கல்யாணம் செய்து விட்டார் என கூறப்படுகிறது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் டி இமான் திருமணம் செய்துகொண்ட பிறகு ரிசப்ஷன் வைத்துள்ளார் அப்பொழுது சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தற்போது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படங்கள். டி. இமான் திருமணம் சைலண்டாக நடந்தது தற்போது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.