DD returns : தமிழ் சினிமா உலகில் காமெடியன்னாக ஜொலித்த சந்தானம். அஜித், விஜய், ரஜினி, விக்ரம் என பல டாப் ஹீரோக்களுடன் நடித்து பெயரையும் புகழையும் சம்பாதித்தார் தொடர்ந்து வெற்றி பெறமாக ஓடிக் கொண்டிருந்த அவர் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார்.
தொடர்ந்து நல்ல நல்ல படம் பண்ணி வந்தாலும் பெரிய வெற்றியை பார்க்கவில்லை.. இதை உணர்ந்து கொண்ட சந்தானம் இனி சென்டிமென்ட், ஆக்சன் படங்கள் செட்டாவது தனக்கான காமெடி டிராக்கில் ஓடுவது தான் சரி என உணர்ந்து தற்பொழுது டிடி ரிட்டன்ஸ் என்னும் படத்தில் நடித்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க என்னுடைய படமாக இருக்கும் என்று சந்தானம் சொன்னார். படத்தில் காமெடி நீங்கள் எதிர்பார்த்தது போல இருக்கும் என கூறினார். படம் இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார் சந்தானம், சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனீஸ் காந்த், பெப்சி விஜயின் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தின் கதை என்னவென்றால்.. ஒரு காலகட்டத்தில் பாண்டிச்சேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பங்களா அங்கே சூதாட்டத்தை தொழிலாக கொண்டு போட்டியில் தோற்பவர்களை கொலை செய்யும் ஒரு குடும்பத்தினரை ஊர் மக்கள் எரித்து கொள்ளுகிறார்கள்.
இதற்கிடையே நிகழ்காலத்தில் பாண்டிச்சேரியின் ஊர் பெரிய மனிதர் பெப்சி விஜயனிடம் இருந்து பணம் உள்ளிட்ட பலவற்றை பிபின், மோனிஸ்கான் குழுவால் கொள்ளை அடிக்கப்படுகிறது இந்த பக்கம் விபின் போதை பொருள் பிசினஸில் சம்பாதிக்கும் பணத்தை திருட மொட்டை ராஜேந்திரன் குரூப் முயலுகிறது மறுபுறம் சுரபி பிரச்சனையிலிருந்து காப்பாற்ற சந்தானத்திற்கு 25 லட்சம் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் பிபின் குழு கொள்ளை அடித்த பணம் நகை மொட்ட ராஜேந்திரன் கைப்பற்றப்படுகிறார் அடுத்த நிமிடமே அது சந்தானம் வசமாகிறது அவரும் சுரபியை மீட்கிறார் இதற்கிடையில் போலீசுக்கு பயந்து மீதமுள்ள பணம் நகை சந்தானம் நண்பர்களான மாறன், சைதை இருவரும் பாண்டிச்சேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பங்களாவில் கொண்டு போய் வைக்கின்றனர் பேராசை மனிதர்கள் பேய்களாக அலையும் அந்த பங்களாவில் கேம் விளையாடி என்றால் பணம் இல்லை என்றால் மரணம் என்ற நிலை இருக்கிறது இதனை சந்தானம் தொடங்கி மொட்டை ராஜேந்திரன் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை. படத்தில் சந்தானம், ரெட்டின் கிங்ஸ்லி போட்டி போட்டு நடித்துள்ளனர் மாறன் மற்ற நடிகர்களும் சூப்பராக நடித்துள்ளனர். மொத்தத்தில் டிடி ரிட்டன்ஸ் சந்தானத்திற்கு ஒரு பெரிய வெற்றி படம்.