சினிமா உலகில் தனக்கு எது பிடிக்குமோ அதில் தொடர்ந்து பயணித்தால் வெற்றியை ருசிக்க முடியும் அந்த வகையில் நடிகர் அருள்நிதி தொடர்ந்து சினிமா உலகில் திரில்லர் மற்றும் வித்தியாசமான படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். முதலில் அருள்நிதி வம்சம் என்ற திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை ஆரம்பித்தார்.
முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் மௌன குரு, டிமாண்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், களத்தில் சந்திப்போம் போன்ற வெற்றி படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் தற்பொழுது கூட பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.
இந்த நிலையில் youtuber எரும சாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் D BLOCK. இந்த படம் அண்மையில் திரையரங்கில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் திரில்லர் கலந்த திரைப்படமாக இருந்து உள்ளது.
இந்த படத்தில் அருள்நிதி உடன் இணைந்து விஜய், மிஸ்ரா, சரண் தீப், உமா ரியாஸ் கான், ரமேஷ் கண்ணா, தலைவாசல் விஜய், சுவேதா வேணுகோபால் மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசதி உள்ளனர். படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற நல்ல வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது டி பிளாக் திரைப்படம் வெளிவந்து மூன்று வாரங்களை தொட்ட..
நிலையில் இதுவரை சுமார் 5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பவும் கூட அருள்நிதியின் டி ப்ளாக் திரைப்படம். சுமார் 30 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன இதனால் வருகின்ற நாட்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று நிச்சயம் பிரம்மாண்டமான ஒரு வசூலை அள்ளும் என கூறப்படுகிறது இதனால் பட குழுவும் சந்தோஷத்தில் இருக்கிறதாம்.