என்னுடைய D50 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு இந்த இயக்குனருக்கு மட்டும்மே.. வேறு யாருக்கும் கிடையாது தனுஷ் அதிரடி

dhanush-50-director
dhanush-50-director

Dhanush-50 director :  தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர், என்னதான் தனுஷ் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்தாலும் இவருக்கு அச்சாணியாக இருந்தது செல்வராகவன் மற்றும் வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் தான், செல்வராகவன் கூட்டணியில் தனுஷின் திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.

அதேபோல் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியதில்லை இவர்கள் கூட்டணியில் வெளியாகிய ஆடுகளம், பொல்லாதவன், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற பல விருதுகளையும் தட்டிச் சென்றது.

ஒரு சில நேரங்களில் தனுஷ் கமர்சியல் திரைப்படங்களில் நடித்து எதிர்பார்த்த வெற்றியை தர முடியவில்லை என்றாலும் அதனை அறிந்துகொண்டு சுதாரித்துக்கொண்டு கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வார்..

தற்பொழுது தனுஷ் தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் ஹிந்தி ஹாலிவுட் என வேற லெவலுக்கு சென்று கொண்டிருக்கிறார், இந்த நிலையில் அடுத்ததாக தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் கர்ணன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் கார்த்திக் நரேன் திரைப்படம் ஒன்று சன் பிக்சர் நிறுவனத்திற்காக டி 44 ஆகிய திரைப்படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன, இப்படி மிகவும் பிஸியாக இருக்கும் தனுஷ் இன்னும் ஒரு வருடத்திலேயே தன்னுடைய ஐம்பதாவது திரைப்படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது எனக் கூறுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

இந்த நிலையில் தன்னுடைய ஐம்பதாவது திரைப்படத்தை இயக்கினால் அது வெற்றிமாறன் தான் இயக்க வேண்டுமென ஒற்றைக்காலில் இருக்கிறாராம் தனுஷ், ஏனென்றால் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் ஹிட் அடைந்துள்ளது அதனால் வெற்றிமாறன் தவிர தன்னுடைய ஐம்பதாவது திரைப்படத்தை இயக்க வேற யாருக்கும் வாய்ப்பு தர மாட்டேன் என திட்டவட்டமாக கூறி விட்டாராம்.