ஒரு காலத்தில் ராசியில்லாத நடிகர் என தமிழ் திரை உலகில் பெயர் எடுத்து வந்தவர் தான் விக்ரம் இவரை பலரும் ராசியில்லாத நடிகர் என்று தான் கூப்பிடுவார்கள் இவர் நடித்த பல திரைப்படங்கள் தோல்வியை தொடர்ந்து சந்தித்ததால் இவருக்கு ராசியில்லாத நடிகர் என பெயர் வைத்து விட்டார்கள் இருந்தாலும் அதற்கெல்லாம் பயப்படாமல் சேது என்ற திரைப்படத்தில் நடித்து நானும் ஒரு நடிகன் தான் என கெத்து காட்டினார் சேது திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு தொடர்ந்து வெற்றியை கொடுத்து வந்தது.
சேது திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் இவரதுதிரைப்படங்கள் வசூல் செய்து வந்தது மேலும் இவரது நடிப்பில் ஒரு சிலதிரைப்படங்கள் உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன்,சியான் 60, கோப்ரா போன்ற பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
சியான் 60 திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் தான் இயக்கி வருகிர் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த 7 கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் சியான் 60 படத்தை தயாரித்துள்ளார் இந்த படத்திற்காக சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இதில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருவதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது என்று தான் கூற வேண்டும் இதனை தொடர்ந்து தற்போது ஒரு தகவல் இந்த திரைப்படத்தை பற்றி வெளியாகியுள்ளது ஆகஸ்ட் 20ம் தேதி இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதை வித்தியாசமான போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்தார்கள் அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து விக்ரமின் புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக கலக்கி வருகிறது
.ஆம் விக்ரம் பார்ப்பதற்கு பிச்சைக்காரன் வேடத்தில் இருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட படப்பிடிப்பு தள புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் விக்ரம் இந்த திரைப்படத்தில் வேற லெவலில் நடித்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.