கைது செய்யப்பட்டாரா குக் வித் கோமாளி அஸ்வின்.! ரசிகர்கள் அதிர்ச்சி

ashwin-1

பொதுவாக சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என்றால் அதற்கு ஏராளமானோர் விஜய் டிவியை தேர்ந்தெடுத்து வருகிறார்கள.அதற்கு முக்கிய காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. இதன் மூலம் போட்டியாளர்களாக பங்குபெற்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ரசிகர்களை கவரும் வகையில் சுவாரசியமான நிகழ்ச்சியாக அமைந்த ஒன்றுதான் குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனை விடவும் இரண்டாவது சீசன் அமோக வெற்றியை பெற்றது. அதோட இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா, ஷகிலா உள்ளிட்ட ஏராளமான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து கோமாளிகளாக பங்கு பெற்ற சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, சுனிதா உள்ளிட்டோரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்கள். இவ்வாறு இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த பெண் ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்த அஸ்வின் மிகவும் வேடிக்கையான மீம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அஸ்வின் இந்நிகழ்ச்சிக்கு முன்பு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடி வந்தார் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் எந்த திரைப்படமும் இவருக்கு சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை.

அதன் பிறகுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்காக கமிட்டாகி பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் முழு முளைக்கின்ற முத்தம்மா மற்றும் அடிப்பொலி என்ற இரண்டு ஆல்பம் பாடல்களும் யூடியூப் தளத்தில் வெளியாகி மிகவும் இரண்டாக தற்போது வரையிலும் இருந்து வருகிறது.

ashwin
ashwin

இந்தப் பாடல்களை தொடர்ந்து தமிழில் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்திலும் தெலுங்கில் மீட் கியூட் என்ற அந்த காட்சி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.  இவ்வாறு பிஸியாக இருந்த வரும் இவரை பற்றிய மீம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பல பெண்களின் இதயத்தைத் திருடிய குற்றத்திற்காக அஸ்வின் போலீசால் கைது செய்யப்படுகிறார் என்ற மீம் ஒன்று வைரலாகி வந்தது அதனை அஸ்வின் தனது இன்ஸ்டால் ஸ்டோரில் பகிர்ந்து ஸ்மைல்வுடன் இதனை பார்த்தவுடன் ஒரு நிமிடம் இதயமே நின்றுவிட்டது என்று கூறியுள்ளார்.