தமிழ் சினிமாவில் எங்கேயோ ஒரு மூலையில் ஒட்டி கொண்டு நடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி போகப்போக தன்னால் முடியும் தனக்கு திறமை இருக்கிறது என்பதை உணர்ந்து படிப்படியாக குணசித்திர கதாபாத்திரம், வில்லன், ஹீரோ என கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்போது தென்னிந்திய சினிமா கொண்டாடும் நாயகனாக உருமாறி உள்ளார் விஜய்சேதுபதி.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி அனைத்து மொழிகளில் ஹீரோ, வில்லனாக நடிக்க ஏகப்பட்ட திரைப்படங்கள் தற்போது குவிந்துள்ளன இதனால் விஜய் சேதுபதி தற்போது செம பிஸியாக இருக்கிறார் மேலும் தற்போது தனது சம்பளத்தை பல மடங்கு அதிகரித்து இருந்தாலும் அவருக்கு பட வாய்ப்பை கொடுக்க தற்போது தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கியூவில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர் நடித்த துக்ளக் தர்பார் திரைப்படம் டிவியில் நேரடியாக வெளியானதைத் தொடர்ந்து இவரது பல்வேறு திரை படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன அந்த வகையில் லாபம் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
இது ஒரு பக்கமிருக்க உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் “விக்ரம்” திரைப் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவும் தற்போது ரெடியாக இருக்கிறார். இது தவிர தெலுங்கு மற்றும் இந்தியிலும் தற்போது படவாய்ப்புகள் இவருக்கு அதிகரித்துக் காணப்படுகின்றன.
மீடியா வாய்ப்பு எங்கு எல்லாம் அழைகிறதோ அங்கு எல்லாம் விஜய் சேதுபதி இருப்பார் அதுக்கு எடுத்து காட்டி சின்னத்திரை டாப் ஹீரோவாக் இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் எல்லாவற்றிலும் புகுந்து காசு பார்க்கிறார்.
தற்பொழுது master chief என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் இதற்காக அவர் பல கோடி சம்பளம் வாங்கிய செய்தி தீயாய் பரவிய நிலையில் தற்போது விஜய்சேதுபதி திரை உலகிற்கு வருவதற்கு முன்பாக தனது குடும்பத்துடன் இணைந்து விஜய் சேதுபதி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது இதோ பாருங்கள் அழகில் ஜொலிக்கும் விஜய் சேதுபதியின் குடும்பம்.