சூர்யாவை தொடர்ந்து முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிகை ரம்யா பாண்டியன்..! அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்..!

ramyapandiyan latest movie

தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் இரண்டு குழந்தைக்கு தாயாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ஏகப்பட்ட இன்னல்களை சந்தித்த நமது நடிகை பல்வேறு ரசிகர் பெருமக்களையும் கவர்ந்து விட்டார்.

மேலும் இவர் பிக்பாஸில் பிரபலமான அதைவிட பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த நமது நடிகை கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கூட நடுவராக பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில்  நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் சூர்யா தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் கூட கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார் இந்த திரைப்படத்தில் ஓரளவு வெற்றியை பெற்ற நமது நடிகை அடுத்ததாக மலையாள நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

ramyapandiyan latest movie
ramyapandiyan latest movie

அந்த வகையில் இந்த திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பழனியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.