இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் மிகப்பெரிய அளவில் கோடிகளில் அள்ளுவதால் அடுத்தடுத்த பிசிசிஐ யும் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது ஆனால் கடந்த ஐபிஎல் முடிந்த பாடு இல்லாமல் இருக்கின்ற நிலையில் அடுத்த ஐபிஎல் குறித்து லீக் ஆன நிலவரங்களை தற்போது ப்ளூ பிரிண்ட் போட்டு உள்ளது.
தற்போது நடந்துள்ள ஐபிஎல் போட்டி பாதி போட்டிகளில் முடிந்த நிலையில் மீதி போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இது முடிந்த கையோடு அடுத்த ஐபிஎல் இரண்டு அணிகள் சேரும் என கூறப்படுகிறது 8 அணிகள் கொண்ட ஐபிஎல் போட்டிகளில் இரண்டு அணிகள் மேலும் சேர்க்கப்பட உள்ளதால் மொத்தம் 10 அணிகள் விளையாடும் என கூறப்படுகிறது.
ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு அதானி குழுமம் ஒரு அணியை உருவாக்கும் என்றும் குஜராத்தை தலைமையிடமாகக் கொண்ட டோரண்ட் குழுமம் குஜராத்தை ஒரு அணியாக எடுக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்த இரண்டு அணிகள் புதிதாக ஐபிஎல் இணையும் என கூறப்படுகிறது.
மேலும் 8 அணிகள் முதல் நான்கு பேரை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும் மீதி வீரர்களை ஏலத்தில் விட்டு அதில் அவர்களை வாங்க அணிகள் தீர்மானித்துள்ளது அந்த வகையில் சென்னை அணி முதல் நான்கு வீரர்கள் குறிப்பிட்டுள்ளது அதாவது முதல் வீரராக ரவீந்திர ஜடேஜாவை தான் பார்க்கிறது ஏனென்றால் அவர் ஒரு ஆல்ரவுண்டர் இருப்பது தான் காரணம் என குறப்படுகிறது.
அதன்பிறகுதான் தோனி, ருத்ராஜ், சங்கரன் ஆகியோர் சென்னை அணி மிகப் பெரிய அளவில் தக்கவைத்துக்கொள்ளும் அதன் பிறகு தான் சுரேஷ் ரெய்னா, தீபக் ஆகியோரை ஏலத்தில் விட்டு எடுக்கும் என கூறப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை.
ஆனால் சென்னைக்கு முதலில் இந்த நான்கு பேரை தான் அதிகம் ஆர்வம் காட்டுவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.