தல கணக்கு என்னைக்கு தப்பா ஆகிருக்கு.! பொளந்து கட்டிய மேக்ஸ்வெல் டூப்ளிசிஸ் .. கடைசி இரண்டே ஓவரில் சம்பவம் செய்த சிஎஸ்கே.! திரில்லர் வெற்றி…

csk vs rcb
csk vs rcb

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் திரில்லர் வெற்றி பெற்றுள்ளது.

16வது ஐபிஎல் போட்டி 24 ஆவது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டூப்ளிசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் நேருக்கு நேராக நேற்று மோதி கொண்டன. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் முதலில் செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஓப்பனராக இறங்கிய டெவன் கான்வே 83 ரண்களும் சிவம் துபே 52 ரண்களும் எடுத்திருந்தார்கள் இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் களை இழந்து 226 ரன்கள் குவித்தது. 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடுமையான இலக்குடன் இறங்கிய பெங்களூர் அணி தங்களுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தது.

விராட் கோலி முதலில் 6 ரன் எடுத்து விக்கெட்டை இழந்த பிறகு மேக்ஸ்வெல் மற்றும் டூப்ளிசிஸ் ஜோடி சேர்ந்து சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தார்கள் டூப்ளிஸ்  23 பந்துகளிலும் மேக்ஸ்வெல் 24 பந்துகளையும் அரசாதம் அளித்ததன் மூலம் பெங்களூரு அணி 8.2 ஓவரில் அசால்டாக 100 ரன்கள் கடந்தது. மேக்ஸ்வெல் 76 ரன்கள் எடுத்து தன்னுடைய விக்கெட்டை பறி கொடுத்தார் மேக்ஸ்வெல்  விக்கெட் பறி கொடுத்தாலும்.

கருணையே காட்டாமல் சென்னை வீரர்களை கதி கலங்க வைத்து வந்தார் டூப்ளிசிஸ் எப்படியாவது டூப்ளிசிஸ் விக்கெட்டை எடுப்பதற்காக தோனி 14வது ஓவரை மொயின் அலி  யிடம் கொடுத்தார். 62 ரன்களில் தன்னுடைய விக்கெட்டை இழந்தார் அதன் பிறகு போட்டியின் வெற்றி அப்படியே திரும்பியது. இதன் பின் களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 28 ரன்கள் சபாஷ் அஹமத் 12 ரன்கள் பிரபு 19 ரண்களும் எடுத்திருந்தார்கள்.

கடைசி இரண்டு ஓவரில் ஆட்டம் அப்படியே மாறியது பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட்டை இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது அதனால் 8 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி படுதோல்வி அடைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி வாகை சூடியது. இதில் சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே மூன்று விக்கெட் எடுத்தார் பதிரானா ரெண்டு விக்கெட்டையும் கைப்பற்றினார்.