மைதானத்தை அலறவிட்ட சிஎஸ்கே வீரர்கள்.! அதிலும் சிவன் 111 மீட்டர் சிக்ஸ் அடித்ததை பார்த்து மிரண்டு போன ஹர்சல் பட்டேல்…

ஐபிஎல் போட்டி மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கில் அடித்து துவம்சம் செய்துள்ளது.

இன்று பதினாறாவது ஐபிஎல் தொடரில் 24 ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டு ப்ளீஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன இந்தப் போட்டி பெங்களூர் சின்னசாமி மைனதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூ ப்ளீசஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதற்கு களம் இறங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வழக்கம் போல் டெவன் கான்வேவும் ருத்ராட்ச் இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த நிலையில் முக்கிய வீரரான ருத்ராஜ் முகமது சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் அப்பொழுது கேச் கொடுத்து விக்கெட் இழந்தார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறும் என பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் மூன்றாவது விக்கெட்டாக  களம் இறங்கிய ரகானே தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அதனால் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அசத்தினார் அதன் பிறகு இறங்கிய சிவம் துபே, டெவன் கான்வேவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்கள். ஒரு பக்கம் டெவன் மறுபக்கம் சிவம் இருவரும் பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தார்கள்.

இதனால் மடமடவென ரன் குவிந்தது. சிவம் துபே  மெர்சல் பட்டேலின் பந்துவீச்சை எதிர்கொண்டார் அப்பொழுது அவரின் பாலை தூக்கி அடித்து 111 மீட்டர் தூரத்திற்கு இமாலயா சிக்சரை விலாசினார். அப்பொழுது 17 பந்துகளில் மூன்று சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்திருந்தார் இதன் மூலம் 14 வது ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்களை இழந்த சென்னை அணி 148 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட்களை இழந்து 226 ரன்கள் எடுத்திருந்தது இதில் டெவன் கான்வே  45 பாலுக்கு 83 ரன்கள் எடுத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் ரஹானே 20 பாலுக்கு 37 ரன்களும், சிவம் 27 பாலுக்கு 52 ரன்கள், அம்பத்தி ராயுடு ஆறு பாலுக்கு பதினாலு ரண்களும் மொயின் அலி  ஒன்பது பாலுக்கு 19 ரண்களும் ரவீந்திர ஜடேஜா 8 பாலுக்கு 10 ரன், தோனி ஒரு பாலுக்கு ஒரு ரன் எடுத்திருந்தார்.

இதில் எக்ஸ்ட்ரா ஏழு ரண்களும் அடங்கும் மொத்தம் சிஎஸ்கே 226 ரன்கள் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து எடுத்திருந்தது. இந்த நிலையில் 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர் சி பி அணி களம் இறங்கியுள்ளது.