CSK அணியின் நட்சத்திர பவுலர் தீபக் சாஹர் – அவரது தங்கை தமிழ் சினிமாவில் நடிக்க போறாங்க.? அதுவும் யார் கூட தெரியுமா.?

malty-chahar
malty-chahar

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது இதில் புதுமுக வீரர்கள் கலந்து கொண்டு தனது திறமையை அழகாக வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பெறுகின்றனர் அந்தவகையில் இந்திய அணிக்கு தற்போது தவிர்க்க முடியாத ஒரு பவுலர் ஆக இருப்பவர் தீபக் சாஹர்.

இவர் சிஎஸ்கே அணியில் இணைந்த பிறகு தனது திறமையை அதிகப்படியாக வெளிக்காட்டி சிறந்த பவுலராக மாறி உள்ளதோடு மட்டுமல்லாமல் இந்திய அணியிலும் இடம் பிடித்து அசத்துகிறார் இவரைத் தொடர்ந்து இவரது தம்பி ராகுல் சஹரும் ஐபிஎல் லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்டு அவரும் தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் தீபக் சாஹர் மற்றும் ராகுல் சாஹரின் சகோதரி சினிமாவுலகில் கால் தடம் பதித்து அவரும் வெற்றி கண்டு வருகிறார் இவரது சகோதரியின் பெயர் மல்டி சாஹர். சினிமா உலகில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார் இவரை சில குறும்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில்லும், ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதே இவரது மிகப்பெரிய ஒரு ஆசையாம்.ஆனால் அது நிறைவேறியது இல்லையோ இவர் வெகுவிரைவிலேயே தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

விக்னேஷ் சிவன் நயன்தாரா தயாரிக்க விநாயக் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் walking talking strawberry ice cream இப்படத்தின் மூலமாக அவர் அறிமுகமாக உள்ளார் இந்த படத்தில் மல்டியும் நடிக்க ரொம்ப ஆசையாக இருப்பதாக தெரிய வருகிறது.