ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க.! படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும் csk வீரர் நக்கல் ட்வீட்.!

sathish
sathish

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஹீரோயினாக நடிக்க உள்ள படம் பிரண்ட்ஷிப். இப்படத்தில் ஹீரோயினாக பிக்பாஸ் சீசன் 3 -ன் நாயகி லாஸ்லியா அவர்கள் நடிக்க உள்ளார். இப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடிக்க உள்ளனர் இதில் தற்பொழுது வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் இணைந்துள்ளார். இப்படத்திற்கு இது ஒரு மிகப்பெரிய பலமாக கருதப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்க புது மாப்பிள்ளையான சதீஷ் அவர்களை இப்படத்தில் கமிட்டாக்கி உள்ளனர் படக்குழு. புதுமாப்பிள்ளையான சதீஷ் இப்படம் மட்டும் இல்லாமல் பல படங்களில் கமிட்டாகி விட்டார் என்பது குறிபிடத்தக்கது. இதனையடுத்து சதீஷ் அவர்கள் டுவிட்டரில் மேலும் கூறியது தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்  நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

நிலையில் ஹர்பஜன் சிங் அவர்கள் ட்விட்டரில் கூறியது புது மாப்பிள்ளை சதிஸ்
எப்பிடி இருக்கீங்க.தம்பி நல்லா சிரிச்ச முகம்.பாக்க அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க.படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்.நல்லா நெருக்கி செய்வோம், என கூறியுள்ளார்.