சமீபத்தில் வெளியான சீரியல்தான் நவரசா இந்த சீரிஸில் கௌதம் மேனனின் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்ற சீரியசை பங்கமாய் கலாய்த்துள்ளார் தமிழ் பட இயக்குனர். மணிரத்தினம் ஜெயந்திர பஞ்சாபகேசன் தயாரிப்பில் OTT இணையதளமான நெட்பிளிக்ஸில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகிய அந்தாலாஜி வகை சீரியஸ் தான் நவரசா இந்த சீரிஸில் ஒன்பது கதைகள் கொண்டு இயக்கி இருந்தார்கள்.
அதேபோல் நவரச சீரியஸில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ், சித்தார்த் பார்வதி, ரேவதி, ரோகிணி என பல முக்கிய நடிகைகள் மற்றும் நடிகர்கள் நடித்து இருந்தார்கள். முக்கியமாக இந்த சீரியஸில் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி என்னும் ஒன்பது அபிநயங்கள் வைத்துதான் கதை உருவாக்கப்பட்டிருந்தது. இதில் காதல் என்ற திமில் உருவாகி இருப்பது தான் கௌதம் மேனனின் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’.
இதற்குமுன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், அச்சம் என்பது மடமையடா, என பல திரைப்படங்கள் சரியான அளவில் காதல் ரசனைகளை சேர்த்து இயக்கியிருந்தார் அதனால் இந்த திரைப்படங்கள் வெற்றி பெற்றது இந்த திரைப்படங்களை எல்லாம் ஒன்று சேர்த்து அரைத்து போல் வெளியாகியது ‘கிட்டார் கம்பி மேலே நின்று’. நவரச சீரியஸில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் பகுதி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான் கொடுத்தது.
இந்த கதையில் எந்த ஒரு சுவாரஸ்யத்தையும் வைக்காமல் வெறும் வசனத்தை வைத்து நகர்ந்ததால் ரசிகர்களுக்கு பெரிதாகப் பிடிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியஸ் ஐ பங்கமாய் கலாய்த்து உள்ளார் இயக்குனர் சி எஸ் அமுதன். இது குறித்த தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவானது மொட்டை மாடியில் ‘கரண்ட் கம்பி கீழே நின்றபடி போஸ் கொடுத்து இருப்பது போல் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் கரண்ட் கம்பிக்கு கீழே நின்று என்ற கேப்ஷன் உடன் இந்த பதிவை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த பின்னணி பாடகி சின்மயி விழுந்து விழுந்து சிரித்து உள்ளதாக தனது பதிவை வெளியிட்டுள்ளார். இதற்கு முன் சிஎஸ் அமுதன் தமிழ் படம் என்ற பெயரில் முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அவர்களின் படங்களில் உள்ள காட்சிகளை வைத்து பங்கமாய் கலாய்த்து சில திரைப்படங்களை இயக்கி வெளியிட்டு வெற்றி கண்டுள்ளார்.
தற்போது சிஎஸ் அமுதன் விமலை வைத்து இரண்டாவது படம் என்ற படத்தை இயக்கி வந்தார் ஆனால் அந்தப் படம் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது.