சித்ரா இறப்பதற்கு முன்பாக ஹோட்டலில் அழுகை சத்தம்..! பேட்டியில் பீதியை கிளப்பிய ஹேம்நாத்..!

vj-chithra-1

நடிகை சித்ரா இறப்பதற்கு முன்பாக நடந்தது குறித்து அவருடைய கணவர் ஹேம்நாத் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ ஆனது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று வைரலாக பரவி வருகிறது. முதலில் நடிகை சித்ரா தற்கொலைக்கு முக்கிய காரணம் அவருடைய கணவர் என்று சித்ராவின் பெற்றோர்கள் அளித்த புகாரின்படி அவர் காவல்துறை அதிகாரியால் விசாரிக்கப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் இருந்து வெளியே வந்தார்.

இவ்வாறு அவர் வெளிவந்த உடன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் அப்போது அவர் பேசியது என்னவென்றால் சித்ரா மறைவிற்கு முக்கிய காரணம் அரசியல் வாதிகள் தான் என கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது ஆகையால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என ஹேமநாத் அவர்கள் கூறியுள்ளார்.

இவர் அவர் பேசியதன் காரணமாக பல்வேறு தரப்பு மக்களும் பல கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கூட முன்னாள் அமைச்சர் உதயகுமார் அவர்கள் தாராளமாக விசாரணை நடத்துங்கள் எங்களுக்கு எந்த ஒரு பயமும் கிடையாது என பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

இந்நிலையில் சித்ரா மறைவிற்கு முன்பாக நடந்தது பற்றி கூறியது என்னவென்றால் பொதுவாக ஷூட்டிங் முடிந்ததும் சித்ரா நேரடியாக வீட்டிற்கு வருவது வழக்கம்தான் அதுமட்டுமில்லாமல் அன்று அவர் வந்தவுடன் பலர் குழப்பத்தில் இருந்தது எனக்கு நன்றாகவே தெரிந்தது.

ஆனால் அவர் வருவதற்கு முன்பாக என்னிடம் பேசும்பொழுது மிகவும் அழகாக பேசியது மட்டும் இல்லாமல் ஐ லவ் யூ என மெசேஜ் எல்லாம் செய்திருந்தார். ஆனால் வீட்டுக்கு வந்தவுடன் நான் கூப்பிடுவது கூட அவருக்கு காது கேட்கவில்லை அந்த அளவிற்கு மன உளைச்சலில் இருந்தது நன்றாகவே தெரிந்தது அது மட்டும் இல்லாமல் அவருக்கு பல்வேறு பிரச்சனை இருந்ததன் காரணமாக நானும் அமைதியாகவே இருந்தேன்.

vj chitra-2
vj chitra-2

பொதுவாக ஷூட்டிங் முடிந்த பிறகு வீட்டுக்கு வந்தவுடன் அவர் குளிக்க சென்று விடுவார் அதேபோல தான் அன்றும் சென்றார் ஆனால் பதினைந்து நிமிடங்கள் ஆன நிலையிலும் அவர் குளியலறையை விட்டு வெளி வரவே இல்லை ஆனால் நான் கதவை தட்டும் பொழுது முனங்கல் சத்தம் மட்டும் கேட்டது ஒருவேளை சித்ரா அழுது கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன் ஆனால் உள்ளே போய் பார்த்த பிறகுதான் அவர் தூக்கில் தொங்கியது எனக்கு தெரிந்தது.

vj chitra-1

உடனே அவள் நடிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு நான் இருந்தேன் ஆனாலும் முதலுதவி அனைத்தையும் செய்து பார்த்தேன் பிறகு தான் தெரிந்தது அவர் நிஜமாகவே தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டது.